நல்ல நட்பிடம் நம் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள கலெக்டர் அறிவுரை
நல்ல நட்பிடம் நம் பிரச்னைகளைபகிர்ந்துகொள்ள கலெக்டர் அறிவுரைசேலம், அக். 10-உலக மனநல தினத்தையொட்டி சேலம் அரசு கலைக்கல்லுாரியில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:மாணவ பருவத்தில் தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் மனதில் அவ்வப்போது தோன்றலாம். ஒருவர் தன் குணங்களை மாற்றிக்கொண்டு அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது, நல்ல நட்பிடம் அவ்வப்போது நம் பிரச்னைகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவை மனநல பிரச்னைகளிலிருந்து மீண்டு வர உதவும்.எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி நம் வாழ்வில் நடக்கும் நேர்மறை செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்கும்போது உடல் நலன் மட்டுமின்றி மன நலனும் அதிகரிக்கும். மனநலன் சார்ந்த உதவிகள், தகவல்கள் தேவைப்பட்டால் மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் நலப்பணி இணை இயக்குனர் ராதிகா, சுகாதார பணி துணை இயக்குனர் சவுண்டம்மாள், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலர் விவேகானந்தன், அரசு கல்லுாரி முதல்வர் செண்பக லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.