உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொடி நாள் வசூல் தொடங்கிய கலெக்டர்

கொடி நாள் வசூல் தொடங்கிய கலெக்டர்

கொடி நாள் வசூல்தொடங்கிய கலெக்டர்சேலம், டிச. 8-சேலம் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோருக்கு, 2024ம் ஆண்டு கொடி நாள் வசூல் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி, நிதி வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண் கண்ணாடி மானியம், வீடு கட்ட மானியம், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை என, 21 பேருக்கு, 4 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை வழங்க, அதை சம்பந்தப்பட்ட பயனாளிகள் பெற்றுக்கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மாதம் தலா, 4,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான அரசாணையை வழங்கினார். கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட கொடிநாள் வசூல், 2.19 கோடி ரூபாய் இலக்கை தாண்டி வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டது. அதேபோல் நடப்பாண்டு வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி