உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேகத்தடையால் திடீர் பிரேக் கல்லுாரி மாணவி உயிரிழப்பு

வேகத்தடையால் திடீர் பிரேக் கல்லுாரி மாணவி உயிரிழப்பு

ஆத்துார்: திருவண்ணாமலை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஆறு-முகம் மகள் கவிதா, 21. சென்னையில் உள்ள தனியார் கல்லுா-ரியில், எம்.ஏ., பொது நிர்வாகவியல், 2ம் ஆண்டு படித்தார்.நண்பர் திருமண விழாவுக்கு சேலம் வந்த அவர், ஏத்தாப்பூர் செல்ல, அவருடன் படிக்கும் சென்னையை சேர்ந்த, தீபக்குமார், 23, என்பவருடன் நேற்று, 'ஜூபிடர்' மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.ஹெல்மெட் அணியாமல் கவிதா ஓட்டினார். வழி தெரியாமல், காலை, 10:30 மணிக்கு, ஆத்துார், செல்லியம்பாளையம் சென்ற நிலையில், அங்கு வேகத்தடை இருந்ததால் திடீரென, 'பிரேக்' போட்டார். அதில் இருவரும் தடுமாறி விழுந்தனர்.படுகாயம் அடைந்த கவிதாவை மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்-துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.கொத்தனார் பலிசேலம், பனமரத்துப்பட்டி அடுத்த, ஜல்லுாத்துப்பட்டியை சேர்ந்-தவர் அஜீத், 23. கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆக-வில்லை.நேற்று இரவு, 7:00 மணிக்கு, பனமரத்துப்பட்டியில் இருந்து, 'மேக்ஸ் 100' பைக்கை ஓட்டிக்கொண்டு ஜல்லுாத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.ஹெல்மெட் அணியவில்லை. கட்டபுளிய மரம் பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த சரக்கு வேன் மீது பைக் மோதியது. இதில் அஜீத் உயிரிழந்தார்.பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை