உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாநகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம் மாநகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாநகராட்சி புதிய கமிஷனராக, இளங்கோவன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.சேலம் மாநகராட்சியில் கமிஷனராக இருந்த ரஞ்ஜீத்சிங், கடந்த மாதம் தேனி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்த அப்பணியிடத்தில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.இவர் நேற்று மதியம், சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !