உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சட்ட கல்லுாரியில் முறைகேடு அமைச்சரை சந்தித்து புகார் மனு

சட்ட கல்லுாரியில் முறைகேடு அமைச்சரை சந்தித்து புகார் மனு

சேலம்: சேலம், அரசு சட்ட கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாண-வர்கள் தமிழரசன், பிரசன்னா ஆகியோர், ஒட்டுமொத்த மாணவ, மாணவியர் கையெழுத்திட்ட புகார் மனுவை, நேற்று சென்-னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து வழங்கினர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: சேலம், அரசு சட்ட கல்லுாரியில் வருகை பதிவேடு முறைகேடு, மூட் கோட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, இங்கு பயிலும் மாணவ, மாணவி-யருக்கு இலவச பஸ் பாஸ் தேவை. குறிப்பாக, கல்வி உதவித்-தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கல்லுாரி அமைதிக்குழு அறிக்கையில் கோரப்பட்ட புகார்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ