உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விதிமீறி மனை பிரிவுக்கு அனுமதி தீர்மானம் நிறைவேற்றியதாக புகார்

விதிமீறி மனை பிரிவுக்கு அனுமதி தீர்மானம் நிறைவேற்றியதாக புகார்

அ.பட்டணம், அடிப்படை வசதியின்றி, மனை பிரிவுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், அதற்கு முறைகேடு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார்.தி.மு.க.,வை சேர்ந்த, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ப்ரீத்தி. இவர், அயோத்தியாப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு: அயோத்தியாப்பட்டணம், பூவனுார் ஊராட்சியில் மனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழி இல்லை. மின்சாரம், குடிநீர் வசதி செய்யப்படவில்லை. ஆனால் உள்ளாட்சியில் பதவி முடிந்த பின், பழைய மினிட் புத்தகத்தில் ஏற்கனவே உள்ள தீர்மானங்களுக்கு இடையே, இந்த மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்கலாம் என்ற தீர்மானத்தை, பதவி முடிவதற்கு, 5 நாட்களுக்கு முன் நிறைவேற்றியது போல், பொய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, தெரியவந்துள்ளது. இதனால் இந்த மனைப்பிரிவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிராம பி.டி.ஓ., கூறுகையில், ''இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை