உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் பிரச்னை குறித்து முதல்வரிடம் புகார் மேட்டூரில் அமைச்சர் நேரில் விசாரணை

குடிநீர் பிரச்னை குறித்து முதல்வரிடம் புகார் மேட்டூரில் அமைச்சர் நேரில் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி, 2வது வார்டு குள்ளவீரன்பட்டி, 8வது வார்டு தங்கமாபுரிபட்டணம் பகுதிக்கு, முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என, அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம், மேட்டூர் வந்த, முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர்.இதுகுறித்து விசாரிக்க நேற்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி, குள்ளவீரன்பட்டி, தங்க-மாபுரிபட்டணம் பகுதிகளுக்கு சென்று, மக்களிடம் குடிநீர் பிரச்னை குறித்து கேட்டறிந்தனர்.அப்போது, 'குறைந்த நேரம் மட்டும் குடிநீர் வருகிறது. அதுவும் சில நாட்கள் வருவதில்லை' என, மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர், எம்.பி., உறுதி அளித்தனர். அப்போது நகராட்சி கமி-ஷனர் நித்யா, தி.மு.க., நகர தலைவர் காசி விஸ்வநாதன் உள்-ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.இதையடுத்து, நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'குடிநீர் வினி-யோகம் பாதிக்கப்பட்ட பகுதிகள், மேடான இடத்தில் உள்ளன.அப்பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகிக்கும்படி, இன்று(நேற்று) நகராட்சி ஊழியர்கள் இரு இடங்களில், குழாய்களில் வால்வு-களை பொருத்தினர். அந்த வால்வுகளை அடைப்பதன் மூலம், மேடான பகுதிக்கு சீராக குடிநீர் செல்லும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை