உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

சேலம், கேலோ இந்தியா போட்டியில் கைப்பந்தில் பங்கேற்ற சேலம் அணி வீராங்கனைகள் தங்கம் வென்றதால், மாவட்ட கைப்பந்து கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய அளவில், 'கேலோ இந்தியா' கைப்பந்து போட்டி நடந்தது. அதில், 18 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவில், தமிழக அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அந்த அணியில் இடம் பெற்ற சேலம் வீராங்கனைகளுக்கு, மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா, பிருந்தாவன் சாலையில் உள்ள, கைப்பந்து கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் வீராங்கனைகள் தான்யா, மோனிகா, சாதனா, கனிஷ்கா ஆகியோரை, கழக தலைவர் ராஜ்குமார் பாராட்டி பரிசு வழங்கினார். கழக ஆலோசகர் விஜயராஜ், துணை தலைவர்கள் ராஜாராம், செயலர் சண்முகவேல், பயிற்சியாளர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி