உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேசிய போட்டிக்கு தேர்வான மாணவர், மாணவிக்கு பாராட்டு

தேசிய போட்டிக்கு தேர்வான மாணவர், மாணவிக்கு பாராட்டு

தேசிய போட்டிக்கு தேர்வானமாணவர், மாணவிக்கு பாராட்டுசேலம், நவ. 22-கர்நாடகா மாநிலம் பெல்காமில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையே, கடந்த வாரம் தேசிய அளவில், 'ஸ்கேட்டிங்' போட்டி நடந்தது. அதில் சேலத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகிதா ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஐ.சி.ஐ.சி.ஐ., பள்ளிகள் இடையே நடந்த தேசிய ஸ்கே ட்டிங் போட்டியில், சேலத்தை சேர்ந்த, தனியார் பள்ளி மாணவர் பிரணவ், தங்கம் வென்றார். பள்ளிகள் இடையேயான தேசிய போட்டியில் தங்கம் வென்றதால், டிசம்பரில் டில்லியில் நடக்க உள்ள இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும், தேசிய ஸ்கேட்டிங் போட்டிக்கு, மகிதா, பிரணவ், நேரடியாக தேர்வு பெற்றனர். சேலத்தில் இருந்து முதல்முறை இப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பிரபாகரன், சத்யா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை