உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டட தொழிலாளி அடித்து கொலை?

கட்டட தொழிலாளி அடித்து கொலை?

சேலம், சேலம் மாவட்டம் ஆரியகவுண்டம்பட்டி, காளியம்மன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 21. கட்டட தொழிலாளியான இவர், கடந்த, 25ல், வேலைக்கு சென்ற நிலையில் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை, அவர், ஆரியகவுண்டம்பட்டி சேமிப்பு கிடங்கு அருகே சுடுகாடு பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, அவரது அண்ணன் பிரசாத், 24, என்பவருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த பின், பிரசாத் தகவல்படி சூரமங்கலம் போலீசார், அஜித்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பரிசோதனை அறிக்கையில், அஜித்குமாரின் பின்புற மண்டையில் அடித்ததற்கான தடயம் உள்ளது. ரத்தம் கசிந்துள்ளது. அஜித்குமார், அவரது நண்பர்கள் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் சிலரை பிடித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை