உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒப்பந்த ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு; மருத்துவமனையில் சுகாதார பணி பாதிப்பு

ஒப்பந்த ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு; மருத்துவமனையில் சுகாதார பணி பாதிப்பு

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழி-யர்கள், முன் அறிவிப்பு இன்றி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவம-னையில், க்யூ.பி.எம்.எஸ்., எனப்படும், 'குவா-லிட்டி பிராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ்' ஒப்-பந்த நிறுவனத்தின் கீழ், 26 ஆண், 30 பெண் உள்-பட மொத்தம், 56 பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் செக்யூரிட்டி, மருத்துவமனை சுகாதார பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.நேற்று மருத்துவமனை நிர்வாகத்துக்கு முன்-கூட்டியே தகவல் தெரிவிக்காமல் காலை, 7:00 மணி முதல் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர். இதனால், மருத்துவமனை சுகாதார பணிகள் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்-டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறி-யதாவது:ஒப்பந்த நிறுவனத்தில் இரு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த மாதப்பன் என்பவருக்கு இன்-னமும் சம்பளம் வழங்கவில்லை. வழக்கமாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கும் சம்-பளத்தில், பணம் பிடித்தம் செய்துள்ளனர். அதற்கு தொழில்வரி பிடித்தம் செய்ததாக கூறுகின்றனர்.இ.எஸ்.ஐ.,- இ.பி.எஸ்., பிடித்தம் செய்யும் பட்-சத்தில் அதற்காக பதிவு சீட்டு வழங்குவதில்லை. ஊதிய உயர்வும் வழங்கவில்லை. அதை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நேற்று மாலை வரை வேலை புறக்-கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை