உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிய சர்ச்சை: மூவர் மீது வழக்கு

கோவில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிய சர்ச்சை: மூவர் மீது வழக்கு

ஓமலுார் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே அய்யன்காட்டுவளவில், முஸ்லிம்கள் தொழுகைக்கு, மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, காடையாம்பட்டி வருவாய்த் துறையினர், அரசு புறம்போக்கில் இடம் தேர்வு செய்து முட்டுக்கல் நட்டனர். இதற்கு, கடந்த, 26ல், கருப்பணார் கோவில் விழாவின்போது ஆடு, கோழி பலியிடும் இடம் என எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், ஹிந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் சமாதானப்படுத்தினர்.இந்நிலையில், காடையாம்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெய்கணேஷ், நேற்று முன்தினம் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், 'ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாவட்ட செயலர் மணிகண்டன், யு - டியூப் சேனல் ஆசிரியர் ராஜேஸ்ராவ் ஆகியோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படி வீடியோ பதிவை, யு - டியூப், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியுள்ளனர்' என, கூறியிருந்தார். விசாரித்த போலீசார், மூன்று பேர் மீதும், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையே, ஜமாத் செயலர் கதர் ஷெரீப், கலீல், உறுப்பினர் ஜலால் ஆகியோர் சக நிர்வாகிகளுடன் நேற்று தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு தீவட்டிப்பட்டி போலீசார், வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜலால் கூறுகையில், ''அரசு வழங்கிய இடத்தில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவது குறித்து, ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Barakat Ali
மார் 30, 2025 21:05

எங்களுக்கு விரைவில் .....


பாரத புதல்வன்
மார் 29, 2025 19:47

நான் தொப்பி போடாத தமிழக முதல்வர் என அடிக்கடி சொல்லுவர், அடுத்து காலப்போக்கில் ஜமாத்துடன் அனுமதி வாங்கி கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பார்கள்,வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுங்கள் இந்த தொப்பி போடாத...... நபருக்கு.


Raja
மார் 29, 2025 12:26

. முஸ்லீஎம்கள் மற்ற மதத்தினரை காபிர்கள் என்றும் மற்ற மத சடங்குகளில் ஒலிக்கப்படும் இசை ஹராம் என்றும் தடை செய்துள்ளனர். பின்பு எதற்கு இந்துக்கள் கோவில் அருகில் தொழுகையை நடத்த வேண்டும் ?


Karthik
மார் 29, 2025 23:11

அதே காரணத்தை கூறி பிற மதத்தவர் சடங்கு சம்பிரதாயங்களை தடைசெய்யத்தான். வேறென்ன இருக்க முடியும் இதன் நோக்கம்..??


எஸ் எஸ்
மார் 29, 2025 11:26

மெல்ல மெல்ல அந்த கோவில் திருவிழா வுக்கு கூட முஸ்லீம்களிடம் அனுமதி பெறும் நிலை வரும்


Karthik
மார் 29, 2025 23:08

Yes.. Very soon come that day..


krishna
மார் 29, 2025 10:52

திமுக, முஸ்லிம் இவர்கள் இருக்கும் இடத்தில் இடம் வாங்கி வீடு கட்டி வசிக்க கூடாது. அவ்வளவு அராஜகம். எங்களை என்ன செய்ய முடியும் என்ற ஆணவம். சட்டம், தர்மம் எதையும் மதிப்பதில்லை. There are very few exceptions.


kamal ks
மார் 30, 2025 15:04

உருட்டு


Anand
மார் 29, 2025 10:41

செய்தி தலைப்பை பார்த்து மேற்படி இடம் ஒதுக்கிய அதிகாரிகள் மீது வழக்கு என்று தான் நினைத்தேன்... அதுதான் இல்லை, இந்த அக்கிரமத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது வழக்கு... விடியா மூஞ்சி ஆட்சியில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்...


Karthik
மார் 29, 2025 23:06

Me too Anand.. But Reverse..


Kumar Kumzi
மார் 29, 2025 10:17

இந்துமத ஜென்ம விரோதி


kamal ks
மார் 30, 2025 15:04

அவனுக கொடுக்கற ஓசி பிரியாணி சாப்புடு நண்பன் ஆயிருல


N Annamalai
மார் 29, 2025 09:21

இந்துக்களை அழித்து விட என்ன என்னவெல்லாம் செய்கிறார்கள் .குற்றம் சுமத்தியவர்கள் மேல் வழக்கு .போலி மதவாதம் .ஒற்றுமை என்று அவர்களிடம் சொல்லலாமே ?..சொந்த காசில் சூனியம் வைப்பது இது தான் .


Vijay
மார் 29, 2025 08:19

600 ஆண்டு முகலாய ஆட்சி, 300 ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் கூட அனுபவிக்காத துன்பங்களை இன்று நாம் இந்த ஸ்டாலின் ஆட்சியில் அனுபவிக்கிறோம். இறைவனிடம் வேண்டி கொள்வது, அடுத்த ஜென்மத்திலாவது ஹிந்துக்களை சூடு சுரணயுடன் படைக்க வேண்டும் என்று.


kamal ks
மார் 30, 2025 15:02

உருட்டு உருட்டு வாய்லவந்ததெல்லாம் கேக்கறவன் கேனயன் வேல இருந்தா பாருங்க


பேசும் தமிழன்
மார் 29, 2025 08:07

கோவில் அருகே இடம் ஒதுக்கிய ஆட்கள் மீது தானே வழக்கு பதிவு செய்ய வேண்டும்..... அதை விடுத்து அதை தட்டி கேட்ட ஆட்கள் மீது வழக்கு பதிவு..... இது தான் விடியாத அரசின் சாதனை.


முக்கிய வீடியோ