உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு எழுச்சி பாடல் ரூ.50,000 பரிசு அறிவிப்பு

கூட்டுறவு எழுச்சி பாடல் ரூ.50,000 பரிசு அறிவிப்பு

சேலம்:சர்வதேச கூட்டுறவு ஆண்டாக, 2025 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு பற்றிய தனித்துவ பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பப்படும் பாடல், இசை அமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும். தமிழில் கூட்டுறவு பற்றிய தனித்துவ பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளர்கள், மக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி, உத்வேகம் உண்டாக்கக்கூடிய பாடலாக இருக்க வேண்டும்.அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த பாடலுக்கு, 50,000 ரூபாய்-க்கான பணமுடிப்பு, கேடயம் வழங்கப்படும். பாடலின், 'ஹார்ட் காபி'யை, கூரியர் அல்லது தபால் மூலம், 'மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, நெ. 170, ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை -600 010' எனும் முகவரிக்கும், பாடலின், 'சாப்ட் காபி'யை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும், வரும் மே, 30 மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை