உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொப்பரை வரத்து வெகுவாக சரிவு

கொப்பரை வரத்து வெகுவாக சரிவு

வீரபாண்டி, டிச. 18-சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ கொப்பரை, 112 முதல், 140 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 2,174 கிலோ கொப்பரை மூலம், 2.79 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.ஆனால் கடந்த வாரம், 3,233 கிலோ வரத்து இருந்த நிலையில் இந்த வாரம் வெகுவாக சரிந்தது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'சபரிமலை ஐயப்ப சீசனால் தேங்காய் தேவை அதிகரித்த நிலையில், கொப்பரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது' என்றனர்.ரூ.6.50 லட்சத்துக்கு ஏலம்ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. விற்பனையாளர் ஆனந்தி தலைமை வகித்தார்.அதில் விவசாயிகள், 130 மூட்டைகளில், கொப்பரைகளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், கிலோ, 86.12 முதல், 143.69 ரூபாய் வரை ஏலம் கோரினர். 51.15 குவிண்டால் மூலம், 6.52 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை