ரூ.13 லட்சத்துக்கு பருத்தி, எள் விற்பனை
இடைப்பாடி, கொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 244 மூட்டைகளை கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 6,769 முதல், 7,679 ரூபாய்; டி.சி.எச்., ரகம் மூட்டை, 7,799 முதல், 8,799 ரூபாய்; கொட்டு ரகம் மூட்டை, 3,229 முதல், 4,829 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 6.32 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பி.டி., ரகம் மூட்டைக்கு, 160 ரூபாய் விலை உயர்ந்தது. அதேநேரம், டி.சி.எம்., ரகம், 90 ரூபாய், கொட்டு ரகம், 180 ரூபாய் விலை குறைந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.அதேபோல் எள் ஏலத்துக்கு, 50 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. வெள்ளை எள் கிலோ, 95.50 முதல், 118.50 ரூபாய்; சிவப்பு எள், 98.80 முதல், 121.90 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 6.84 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. பருத்தி, எள் ஆகியவை மூலம், 13.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.