கொளத்துார் ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் கூட்டம்
கொளத்துார் ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் கூட்டம்மேட்டூர், டிச. 10-கொளத்துார் ஒன்றியத்தில், ஐந்து ஆண்டுகள் பதவி காலம் முடிந்த நிலையில், இறுதி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் கடந்த, 2020 ஜன., 6ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். கொளத்துார் ஒன்றியத்தில், தலைவராக புவனேஸ்வரி, துணைத் தலைவராக மாரப்பன் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.வரும் ஜன.,5ல் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் முடிகிறது. இதனால், கொளத்துார் ஒன்றியத்தில் உள்ளாட்சி கவுன்சிலர்கள் பங்கேற்ற கடைசி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் மாரப்பன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செந்தில்குமார் (கி.ஊ) மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றியத்தில் திட்ட பணிகளை கவுன்சிலர்கள் சுமுகமாக மேற்கொண்டதற்கு, உள்ளாட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அலுவலர்களுக்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.