உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வைரக்கல் வாங்கி மோசடி; தம்பதி, புரோக்கருக்கு வலை

வைரக்கல் வாங்கி மோசடி; தம்பதி, புரோக்கருக்கு வலை

சேலம்; சேலத்தில் வைரக்கல் வாங்கி, 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலத்தை சேர்ந்தவர் பிரபு, 35; பள்ளப்பட்டியில் தங்கம், வைரம் வியாபாரி. சென்னையை சேர்ந்த புரோக்கர் கண்ணன் மூலம், புதுக்கோட்டையை சேர்ந்த மணிமாறன், அவரது மனைவி மாரிக்கண்ணு, மீனம்மாள் அறிமுகமாகினர். சேலத்தில் பிரபுவை சந்தித்த மூவரும், 'தங்கம், வைரம், வைர ராசிக்கற்களை வாங்கி விற்கிறோம். நீங்கள் கொடுத்தால், கூடுதல் விலைக்கு விற்று தருகிறோம்' என்று கூறியுள்ளனர். இதை நம்பி, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு வைரக்கற்களை பிரபு கொடுத்துள்ளார். முன்பணமாக, 1 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், 4 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்தனர். அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, மொபைல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபு, பள்ளப்பட்டி போலீசில் புகாரளித்தார். மணிமாறன், மாரிக்கண்ணு, மீனம்மாள் மீது வழக்குப்பதிந்த போலீசார், மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை