உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்பதியை கட்டி போட்டு நகை, பணம் கொள்ளை

தம்பதியை கட்டி போட்டு நகை, பணம் கொள்ளை

ஓமலுார்:தம்பதியை கட்டி போட்டு, 20 சவரன் நகை, 70,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால், 70. இவரது மனைவி சரோஜா, 65. விவசாயம் செய்து தனியாக வசிக்கின்றனர். குழந்தைகள் கிடையாது. அருகே ராஜகோபாலின் சகோதரர்கள் நாகப்பன், ரெங்கரா ஜு ஆகியோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ராஜகோபால், சரோஜா வீட்டில் இருந்த போது, மர்ம நபர்கள் கதவை தட்டினர். சரோஜா, கதவை திறந்ததும் உள்ளே புகுந்த இருவர், தம்பதியை தாக் கி, கட்டி போட்டனர். சரோஜாவின் 5 சவரன் செயினை பறித்தவர்கள், வீட்டில் வைத்திருந்த, 15 சவரன் நகை, 70,000 ரூபாயை எடுத்து கொண்டு தப்பினர். சரோஜா அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் ஏ.டி.எஸ்.பி., சுப்ரமணியம், ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் நேரில் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !