உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் பிடிவாரன்ட்

சேலம்:சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த குணசேகரன் மனைவி கங்காதேவி, 41. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம், அவரது மகன்களுக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஆதிமூலம் தரப்பினர் தாக்கியதில் கங்காதேவி படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆதிமூலம் உட்பட 3 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியனுக்கு பலமுறை 'சம்மன்' அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்த வழக்குக் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோதும் ஆஜராகவில்லை. இதனால், குமரவேல் பாண்டியனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை