உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்னல் தாக்கி பசு, கன்று பலி

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

மேட்டூர், மேச்சேரி அருகே, காற்றுடன் கூடிய மழையால் மின்னல் தாக்கி பசு, கன்று பலியானது.மேச்சேரி, புக்கப்பட்டி ஊராட்சி, மேல்கட்டையன்வளவு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சவுந்தரம். இவர் தனது வீட்டில் ஒரு பசு, ஒரு கன்று வளர்க்கிறார். மேட்டூர், மேச்சேரி, கொளத்துார் சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு மின்னல், இடி, பலத்த காற்றுடன், 64.4 மி.மீ., மழை பெய்தது. அப்போது, சவுந்தரம் வீட்டருகே கட்டியிருந்த பசுவும், கன்றுவும் மின்னல் தாக்கி பலியானது. பலியான பசு, கன்றை நேற்று காலை வருவாய்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ