சி.பி.எம்., இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம்: பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில், கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி, சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் மோகன் சி.பி.ஐ., (எம்.எல்) மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலஸ்தீன மக்களுக்கு எதிராக செயல்படும், இஸ்ரேலுக்கு ஆத-ரவாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இந்தியா எந்தவித உதவியும் செய்யக்கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பி-னர்கள் குணசேகரன், ராமமூர்த்தி, ஞானசவுந்தரி, மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.