உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களால் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களால் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

சேலம், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களால், சேலம் ரயில்வே ஸ்டேஷன், புது பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில், கல்லுாரி விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவ, மாணவியர், நேற்று வீடுகளுக்கு புறப்பட்டனர்.இதனால் நேற்று மாலை, சேலம் புது பஸ் ஸ்டேண்டில் கூட்டம் அலைமோதியது. பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டபோதும், ஒவ்வொரு பஸ்சிலும் இரு மடங்கு கூட்டம் ஏறியது. முதியோர், குழந்தை, லக்கேஜ் வைத்திருப்பவர்கள், பஸ்களில் ஏற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.அதேபோல் சேலம் ரயில்வே ஸ்டேஷனிலும், நேற்று மதியம் முதலே, பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சேலம் வழியே கேரளா, பெங்களூரு, ஆந்திரா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.பொதுப்பெட்டிகளில் நிற்க கூட இடமின்றி பலரும் பயணித்தனர். இதனிடையே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்க, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி