உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம்: விடிய, விடிய மின் தடையால் அவதி

சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம்: விடிய, விடிய மின் தடையால் அவதி

சேந்தமங்கலம், கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில், வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான பாக்கு மரங்கள் உடைந்து விழுந்தன.சேந்தமங்கலம் யூனியனில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியதுடன் கன மழை பெய்தது. இதனால் காரவள்ளி அருகே, நிதித்ராயன்காட்டில் தென்னை மரம் மின் கம்பியில் உடைந்து விழுந்தது. மேலும், பல விவசாய தோட்டங்களில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. காரவள்ளி, புலியங்காடு, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, 500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், பல இடங்களில் முறிந்து விழுந்தன. காளப்பநாய்க்கன்பட்டி முதல், காரவள்ளி வரை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பிகளில் விழுந்ததால், மின் வினியோம் நிறுத்தப்பட்டது.இதனால், நடுக்கோம்பை, ஊர்புரம், வெண்டாங்கி உள்ளிட்ட பல கிராமங்களில் விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை