உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ விபத்தில் வெடித்தது சிலிண்டர்;5 பவுன், ரூ.1.70 லட்சம் நாசம்

தீ விபத்தில் வெடித்தது சிலிண்டர்;5 பவுன், ரூ.1.70 லட்சம் நாசம்

தலைவாசல்:தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் தேவராஜன், 50. இவரது மனைவி சுமதி, 45. கரும்பு சோகையால் கூரை வீடு கட்டியிருந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுமதி மட்டும் வீட்டில் இருந்த நிலையில், தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து, அவர் சிறு காயத்துடன் வெளியேறிவிட்டார். பின் மக்கள் தகவல்படி, 4:40 மணிக்கு, அங்கு வந்த, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால், 5 பவுன் தாலிக்கொடி, 1.70 லட்சம் ரூபாய், 'டிவி', தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. காஸ் சிலிண்டரும் வெடித்து துாக்கி வீசப்பட்டது. தீப்பற்றியது எப்படி என, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை