காற்றுடன் மழையால் அணை பூங்கா வெறிச்
காற்றுடன் மழையால்அணை பூங்கா 'வெறிச்'மேட்டூர், டிச. 2-மேட்டூர் சுற்றுப்பகுதியில் கடந்த, 17ல், 2.2 மி.மீ., மழை பெய்தது. பின் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் வங்க கடலில், 'பெஞ்சல்' புயல் தீவிரம் அடைந்தது. இதனால் கடலோரத்தில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயலால் நேற்று முன்தினம் இரவு முழுதும் மேட்டூரில் மழை பெய்தது. நேற்று பகலிலும் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் எப்போதும் சுற்றுலா பயணியருடன் காணப்படும், மேட்டூர் அணை பூங்காவில் ஆங்காங்கே சில சுற்றுலா பயணியர் மட்டும் தென்பட்டனர். இதனால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் 1,120 பேர் பூங்காவை பார்வையிட்டனர். மேலும் காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள் நீராடும் பகுதி, மீன் வறுவல் விற்பனை கடைகளும் வெறிச்சோடின.