மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு சேலம் வாலிபர் உயிரிழப்பு
31-May-2025
சேலம், சேலம் மாவட்டம் வாழப்பாடி தேங்கல்பட்டி ஊராட்சி, மந்தக்காட்டை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகன் சுரேஷ். இவரின் மனைவி அனிதா, 25; தம்பதிக்கு இரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர்.மாமனார், மாமியாரிடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அனிதா தடுக்க முயன்ற நிலையில் குப்புசாமி கீழே விழுந்துள்ளார். இதில் ஆவேசமடைந்தவர், வீட்டில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து, அனிதா, இரண்டு வயது குழந்தை சர்வமித்ரனை சுட்டுள்ளார்.இதில் காயமடைந்த இருவரும், வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மட்டும் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார், குப்புசாமியிடம் விசாரித்து வருகின்றனர்.
31-May-2025