உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 108 வேல் பூஜை நடத்த முடிவு

108 வேல் பூஜை நடத்த முடிவு

மேட்டூர், டிச. 8-சேலம் மேற்கு மாவட்ட கிராம பூசாரிகள் நல பேரவை ஆலோசனை கூட்டம், மேட்டூர், சேலம்கேம்ப், குமரன் குன்று பாலமுருகன் கோவிலில் நேற்று நடந்தது.பேரவை நிர்வாக அறங்காவலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் கிராம கோவில் பூசாரிகளுக்கு நலவாரியம், ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து வரும், 21ல் மேட்டூர் ஆர்.எஸ்.,ல் உள்ள தனியார் மண்டபத்தில், நோய், திருமண தடை நீங்க, வியாபாரத்தை பெருக்க, 108 வேல் பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. பேரவை பொறுப்பாளர் செல்வராஜ், வேல்பூஜை பொறுப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !