உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு

கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு

ஓமலுார் : ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதன் தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த செல்வராணி, துணைத்தலைவியாக புஷ்பா உள்ளனர். நேற்று அந்தந்த வார்டுகளில் கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து சார்பில் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டங்களில் சாக்கடை கழிவை முறையாக அகற்றுவதில்லை. அப்படி அகற்றினாலும் அந்த கழிவை எடுத்துச்செல்வதில் தாமதம் செய்கின்றனர். பல வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவிளக்கு பராமரிப்பில் அதிக கவனம் தேவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, மக்கள் தெரிவித்தனர். அதை அலுவலர்கள் குறித்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி