உணவுப்பொருள் கலப்படம் விழிப்புணர்வுக்கு கோரிக்கை
சேலம்: சேலத்தில் கன்ஸ்யூமர் வாய்ஸ் சங்க ஆண்டு பொதுக்குழு நேற்று நடந்தது. புது தலைவராக பிரபாகரன், செயலர் துரைராஜ், துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலர் சபாபதி, பொருளாளர் கலைக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான செட்டிச்சாவடி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண் திட்டத்தை முழுவீச்சில் செயல்ப-டுத்தல்; மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பள்ளி, கல்லுாரி, மக்கள் மத்தியில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு ஏற்ப-டுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிறப்பு மருத்துவர் பன்னீர்செல்வம், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.