உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மீண்டும் ரயில் கட்டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு வழங்க கோரிக்கை

மீண்டும் ரயில் கட்டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு வழங்க கோரிக்கை

சேலம்: சேலத்தில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உலக ஓய்வூதியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார்.அதில் ஊழியர்களுக்கு விரோதமான புது ஓய்வூதியம் திட்டம்(என்.பி.எஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்(யு.பி.எஸ்) ஆகியவற்றை ரத்து செய்தல்; மத்திய அரசு ஊழியர்களுக்கு, 8வது ஊதியக்குழுவை உடனே அமைத்தல்; மூத்த குடிமக்களுக்கு, நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்குதல்; தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி தமி-ழக அரசு ஓய்வூதியர்களுக்கு, 70 வயதில், 10 சதவீத கூடுதல் ஓய்-வூதியம் அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மகளிர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சோபனா, அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் மணி உள்-ளிட்ட பலர் பேசினர்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் ராஜ்குமார், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., மாவட்ட துணைத்தலைவர் சுதாகரன், மாநில உதவி தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ