உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.ஏ.ஏ., சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சி.ஏ.ஏ., சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்:குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, சேலம், தாதகாப்பட்டி கேட் மைதானத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில் சட்டத்துக்கு எதிராகவும், ரத்து செய்யவும் கோஷம் எழுப்பினர். மாதர் சங்க மாவட்ட செயலர் வைரமணி, மாநிலகுழு உறுப்பினர் ஞானசவுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் சேலம் கோட்டை மைதானத்தில், வி.சி., வடக்கு மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல செயலர் இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை