நகர கூட்டுறவு வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், சேலம் கோட்டை மைதானத்தில், அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இணை செயலர் அமலாராணி தலைமை வகித்தார். சங்க பணியாளர் டேனி, 50 சதவீத மாற்றுத்திறனாளி. அவருக்கு, 12 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்காமல், பணிமூப்பு பட்டியலை மறுத்து வரும் சங்க நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலர் குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், சங்க பணியாளர்கள் பெயரில் நகைகள் அடகு வைக்கக் கூடாது என விதி இருந்தும், அதை மீறி, நகைக்கடன் பெற்றுள்ளதால், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.