துணை பதிவாளர் மொபட் திருட்டு
சேலம், சேலம், குமரகிரி பைபாஸ் காமராஜர் காலனியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் துணை பதிவாளராக பணிபுரிபவர் கலாவதி, 58. இவர் கடந்த, 15ல், உறவினரின், 'ஆக்டிவா' மொபட்டில் அலுவலகம் வந்து அங்குள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். மாலை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.