உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வடக்கு சட்டசபை தொகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி

வடக்கு சட்டசபை தொகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணி

சேலம்: சேலம் வடக்கு சட்டசபை தொகுதியில், 7 இடங்களில் தொகுதி மேம்பாடு நிதி, 1 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, 7வது வார்டு ஆத்துக்காட்டில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கான்கிரீட் சாலை, தார்ச்சாலை, 8வது வார்டில் மாரியம்மன் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை, 12வது கோட்டம் ராஜகணபதி நகரில் கால்வாய், 16வது வார்டு, வாசகர் சாலையில் கழிவுநீர் கால்வாய், 10வது கோட்டம் ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின், 9 வது வார்டு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு, 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் தொடங்கினார். துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழு தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள், பகுதி செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை