உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அ.பட்டணம்சேலம் அடுத்த உடையாப்பட்டி மாரியம்மன், கருமாரியம்மன், விநாயகர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அலகு குத்துதல், ஆடு,கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடந்தது. பின், காலை, 8:00 முதல், 11:00 மணி வரை தீ மிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் விரதம் இருந்து, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தெருகூத்து நடந்தது. அதேபோல் மல்லுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ஏராளமானவர்கள், அக்னி கரகம் எடுத்தும், காளியம்மன் கோவிலில் இருந்து அலகு குத்தியபடியும், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ