மேலும் செய்திகள்
கால பைரவாஷ்டமியை ஒட்டி மூலிகைகளால் சிறப்பு யாகம்
13-Dec-2025
சேலம்: இறை வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படும் மார்கழி முழுதும், சைவ, வைணவ கோவில்களில், சிறப்பு அபி ேஷகம், ஆராத-னைகள் நடக்கின்றன. அதன்படி மார்கழி பிறப்பான நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலையில், சிறப்பு அபி ேஷகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாணிக்கவா-சகர் எழுதிய திருவெம்பாவை பாடல் பாடி, திரளான பக்தர்கள் வழிபட்டனர். கோட்டை அழகிரிநாதர், பட்டைக்கோவில் வரதராஜர், செவ்-வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்கடாஜலபதி, சின்னதி-ருப்பதி பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடி, பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு பஜனை குழுவினர், செவ்வாய்ப்பேட்டை, பட்டைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், வீதிகளில் பாடியபடி வலம் வந்தனர்.ஆத்துார், கோட்டையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், வெங்கடேச பெருமாள், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, 'கோவிந்தா' கோஷமிட்டும், திருப்பாவை பாடலை பாடியும் வழிபட்டனர். நரசிங்கபுரம் பெருமாள், விநாயகபுரம் ரங்கநாதர், ஆறகளூர் கரிவ-ரதராஜர், வீரகனுார் கஜவரதராஜர், தலைவாசல் வரதராஜர், தம்-மம்பட்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட கோவில்க-ளிலும், சிறப்பு பூஜை நடந்தது.திருப்பாவை ஓதல்காடையாம்பட்டி, கருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்-ரமண சுவாமி கோவிலில் திருப்பாவை குழுவினர் சார்பில் திர-ளான பக்தர்கள், திருப்பாவை பாடல்களை பாடினர். தொடர்ந்து மூலவர் வெங்கட்ரமணருக்கு சிறப்பு பூஜை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 32ம் ஆண்டாக, கெட்டி-முதலி ஆன்மிக அறக்கட்டளை சார்பில் கைலாசநாதர், சிவகாம சுந்தரி சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்-தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாரா-தனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருநீறு அலங்காரம்தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி கந்தசாமி கோவிலில் சுவா-மிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து திருநீறு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்-டது.
13-Dec-2025