கோவில் கட்டடத்தில் விரிசல் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
இளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அக்கோவில் செல்லும் வழியில், அடிவாரத்தில் விநாயகர் கோவில் உள்ளது. அக்கோவில் பக்தர்கள் பங்களிப்புடன், 1995ல் கட்டப்பட்டது. ஆனால் சரியாக பராமரிக்காததால், அருகே உள்ள அரசமர வேர்கள் கட்டட உள்பகுதியில் சென்று, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பூசாரி, அச்சத்துடன் பூஜை செய்ய வேண்டிய அவலம் உள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கட்டடத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.