ஆங்கில புத்தாண்டால் கோவில்களில் சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சேலம்: ஆங்கில புத்தாண்டை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்-தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சேலம், தேர்வீதி ராஜகணபதி கோவிலில் நேற்று, மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரி-சையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோட்டை மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு வெள்ளி கவசம் சார்த்தி பூஜை செய்யப்-பட்டது. கோட்டை அழகிரிநாதர் கோவிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், சிங்கமுக ஆஞ்-சநேயர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளும் தங்க கவசத்தில் ஜொலித்தனர்.அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு, 'சமயபுரம் மாரியம்மன்' அலங்-காரம் செய்யப்பட்டிருந்தது. அய்யந்திருமாளிகை மாரியம்மன், திருமாங்கல்ய கயிறு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரசா-மிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில், தங்க கவசத்தில் காட்சியளித்தார். நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் முழுதும், மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்-தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.குரங்குச்சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நெய் அபி ேஷகம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்களுக்கு லட்டு பிரசாத-மாக வழங்கப்பட்டது. நாள் முழுதும் அன்னதானமும் வழங்கப்-பட்டது.தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வாசனை திரவியங்-களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்-தர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாரமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்-காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.ஓமலுார் கடை வீதி பெரிய மாரியம்மன் வெள்ளி கவசம்; செவ்-வாய்சந்தை காசிவிஸ்வநாதர் ஆலய மூலவர் சிவலிங்கம், சிறப்பு மலர் அலங்காரம்; காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரங்களில் காட்சிய-ளித்தனர்.ஆத்துார், தாயுமானவர் தெரு திரவுபதி அம்மன், தங்க கவசம், புஷ்ப அலங்காரம்; ஆத்துார் வெள்ளப்பிள்ளையார், வெண்ணெய் காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தனர். விநாயகபுரம் கூட்-ரோடு ரங்கநாதர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனுார் கங்கா-சவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், தம்மம்-பட்டி காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.