சவுந்தரராஜர் கோவில் உள்பிரகாரத்தை 27 முறை வலம் வந்து வழிபட்ட பக்தர்கள்
சேலம்: வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய தமிழ் மாதப்பிறப்-பன்று, பெருமாளின், 9 அவதாரங்கள் நிகழ்ந்ததாக ஐதீகம். அந்த நாட்களை, விஷ்ணுபதி புண்ணிய தினமாக கொண்டாடுகின்றனர். அதன்படி ஆவணி பிறப்பான நேற்று, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் ஏராளமான பக்தர்கள், விஷ்ணுபதி புண்ய நேரமான, காலை, 5:30 முதல், 7:00 மணிக்குள் குடும்பத்துடன் வந்து, கோவில் உள்பிரகாரத்தை, 27 முறை வலம் வந்தனர். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மலரை கொடி மரத்தில் வைத்து வழிபட்டனர். அதேபோல் கோட்டை அழகிரிநாதர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் விஷ்ணுபதி புண்ய நேரத்தில், 27 முறை வலம் வந்து தரிசனம் செய்தனர். மேலும் அம்மாபேட்டை ராஜகணபதி தெருவில் உள்ள திருமங்-கையாழ்வார் ராமானுஜ மடத்தில், விஷ்ணுபதி கமிட்டி சார்பில், காலை, 5:30 முதல், 11:00 மணி வரை, திருமண தடை விலக, குழந்தை வரம் வேண்டி, கல்வி வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உலக நன்மை உள்ளிட்டவைக்கு, 11 வகை சிறப்பு யாகங்கள் நடத்தி, அதில் வைத்து பூஜித்த புனிதநீரால், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாரயணன், உற்சவர் தசாவதார பெருமாள் ஆகி-யோருக்கு அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் பூஜை செய்-யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.