தவறாக மோட்டார் சுவிட்சை போட்டுவிட்டு திருடன் ஓட்டம்?
சேலம், சேலம், பொன்னம்மாபேட்டை, ஜோதி தியேட்டர் பிரதான சாலையில் உள்ள வீட்டில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர் நுழைந்தார். தொடர்ந்து அங்கிருந்த மின் சுவிட்சுக்கு பதில், மோட்டார் சுவிட்சை அழுத்தியதாக தெரிகிறது. இதில் அதிகமாக சத்தம் கேட்க, என்ன செய்வது என தெரியாமல் தவித்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாக, அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை வைத்து, அவர் திருட வந்தாரா என, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.