உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு பொருட்கள் அழிப்பு

பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு பொருட்கள் அழிப்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம், தனியார் கடைகள், உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு பிளாஸ்டிக் பொருட்கள், சுகாதாரமற்ற முறையில் உணவு உள்ளதாக கிடைத்த தகவல்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தனியார் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில், 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் இருந்ததால், பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர். மேலும் பிளாஸ்டிக் பை, கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கதிரவன் கூறு-கையில், ''இதேநிலை தொடர்ந்தால் கடை உரிமம் ரத்து செய்யப்-படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை