உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்கீலிடம் தகராறு; ரவுடி கைது

வக்கீலிடம் தகராறு; ரவுடி கைது

சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டி ராம் நகரை சேர்ந்த வக்கீல் தியாகராஜன், 39. நேற்று முன்தினம் வீடு முன் நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஸ்ரீரங்கன், 46, 'சாலையில் ஏன் மண் கொட்டியுள்ளீர்கள்' என, வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், 'மாநகராட்சி கொட்டியது' என தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் ஸ்ரீரங்கன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தியாகராஜன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், ஸ்ரீரங்கனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி