உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விழாவில் இடையூறு: சகோதரர்கள் கைது

விழாவில் இடையூறு: சகோதரர்கள் கைது

மேட்டூர்: மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி காவேரிகிராஸ், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. இதற்கு ஊர்கவுண்டர் பாலன், 67, தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, மக்கள் யாக பூஜை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 70, அவரது மகன்கள் தங்கராஜ், 41, மணிவண்ணன், 38, ஆகியோர், 'சுவாமி வீதி உலா கொண்டு செல்லும் காணியாச்சி உரிமை எங்களுக்கு உள்ளது' என கூறி, வாக்குவாதம் செய்தனர். இதில் தகராறு ஏற்பட, மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி தலைமையில் பேச்சு நடந்தது. அப்போது கும்பாபிேஷகம் முடியும் வரை எந்த தகராறிலும் ஈடுபட மாட்டோம் என இரு தரப்பினரும், ஓராண்டுக்கு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.ஆனால் நேற்று ராமசாமி தரப்பினர் மீண்டும் அண்ணா நகர் மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மேட்டூர் போலீசார் தங்கராஜ், மணிவண்ணனை கைது செய்து, ராமசாமியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ