உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் சாமை விதை வழங்கல்

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க ஜருகுமலையில் சாமை விதை வழங்கல்

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்குள்ள மேலுார், கீழுர் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள், மானாவாரியாக சிறு-தானியம், அரளி சாகுபடி செய்கின்றனர். தினமும் வருவாய் கிடைக்கும் அரளி செடி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்-டுவதால் சிறுதானிய சாகுபடி குறைய தொடங்கியுள்ளது. இச்சா-குடியை ஊக்குவிக்க ஜருகுமலை விவசாயிகளுக்கு, பனமரத்துப்-பட்டி வேளாண் விரிவாக்க மையம் மூலம், 'சாமை' விதை வழங்-கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறுகையில், ''ஜருகுமலையில் மானாவாரியாக சாமை சாகுபடி செய்யலாம். அங்குள்ள, 30 விவசாயிகளுக்கு, 70 கிலோ சாமை விதை மானி-யத்தில் வழங்கப்பட்டுள்ளது. சாமை விதைக்கப்பட்டு பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. 110 நாட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ