மேலும் செய்திகள்
கோவை மாநகரில் டன் கணக்கில் குவிந்த குப்பை
01-Nov-2024
சேலம், நவ. 2-நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் முத்தாய்ப்பாக, பட்டாசுகளை அதிகளவில் வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சேலம் மாநகரில், 60 வார்டுகளிலும் வெடித்த பட்டாசு, கொளுத்திய மத்தாப்புகளால் உண்டான கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள், சாலைகளில் ஆங்காங்கே, மலைபோல குவிந்துள்ளன.அதை ஓரளவு சுத்தப்படுத்திய மக்கள், குப்பை தொட்டியிலும், சாலையோரத்திலும் கொட்டினர். அன்றாடம், 550 மெ.டன் குப்பை சேகரிப்பது வழக்கம். ஆனால், தீபாவளி பட்டாசுகளால் குப்பையின் அளவு, 1,100 மெ.டன் அளவாக அதிகரித்துவிட்டது. அதை அப்புறப்படுத்தும் பணியில் கூடுதலாக, 11 டிராக்டர்கள், 2 காம்பாக்டர்கள், 4 பொக்லைன் மற்றும் 190 பணியாளர்கள் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மூலம், குப்பை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஐந்து நாளில், கூடுதலாக உருவாகும் குப்பையுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த குப்பையும் அகற்றப்பட்டுவிடும்.இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.
01-Nov-2024