விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில்தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்சேலம், நவ. 1-விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பு, மாணவ பேரவை அமைப்பு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, மாசற்ற தீபாவளியை கொண்டாடியது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துறை மாணவ, மாணவியர், பல்வேறு விற்பனை நிலையங்களை, கல்லுாரி வளாகத்தில் நிறுவி இருந்தனர். அதை டீன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கிவைத்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயை, துறை மாணவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு வழங்கினர். மேலும் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஷ்வரி, ஆன்ட்னி ரூபன், ராஜஸ்ரீ, டாக்டர் ஹரிஷ் ஷில்பா, அதன் மாணவ உறுப்பினர்கள், மாணவ பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.