உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., அரசு தோல்வி

தி.மு.க., அரசு தோல்வி

சேலம், சேலம், தளவாய்பட்டியில், பா.ம.க., சார்பில், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம்' நேற்று நடந்தது. அதில் தலைவர் அன்புமணி பேசியதாவது:சேலம் மக்களுக்கு, ஓராண்டுக்கு, 1 டி.எம்.சி., நீர் தேவை என, நீர் மேலாண்மை புள்ளி விபரம் தெரிவிக்கிறது. திருமணிமுத்தாற்றில் இருந்து ஆண்டுக்கு, 2 முதல், 4 டி.எம்.சி., சரபங்கா ஆற்றில் ஆண்டுக்கு, 4 முதல், 5 டி.எம்.சி., கிடைக்கும் தண்ணீரில் சாக்கடையை கலக்க விட்டு, குடிநீருக்கு, மேட்டூர் காவிரி நீரை நம்பி இருக்கும்படி வைத்துள்ளனர். எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மக்களை குடிகாரர்களாக மாற்றி சிந்திக்க விடாமல் செய்ததுதான், தி.மு.க., அரசின் சாதனை. அனைத்து விதத்திலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !