உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., துாங்கிவிட்டது

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., துாங்கிவிட்டது

சேலம் : சேலம், கொண்டலாம்பட்டி, 1, 2 பகுதி சார்பில், அ.தி.மு.க., கட்சி வளர்ச்சி, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். அதில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம் பேசியதாவது: கடந்த பிப்ரவரியில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு கேட்டபோது, அதற்கு தேவையான எல்லா உதவிகளையும், தி.மு.க., அரசு செய்தது. மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அதற்கான விபரங்களை தரமாட்டோம் என, அப்போதே சொல்லியிருக்க வேண்டும். அரிட்டாப்பட்டி மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், திட்டங்களுக்கு தேவையான விபரங்களை, தி.மு.க., அரசு கொடுத்ததை தான், இ.பி.எஸ்., பேசினார். அதை மூத்த அமைச்சர், ஏளனம் பேசி, சட்டசபையை கேலிக்கூத்தாக்கிவிட்டார். இந்த விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொண்டு, இதில், தி.மு.க., துாங்கிவிட்டது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., தான் வழி. அதனால், புதிதாக கட்சி தொடங்கியவர், நம்முடன் வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மாலையில், அம்மாபேட்டை 1, 2, பகுதி நிர்வாகிகள் கூட்டத்திலும் பேசினார். இதில் அமைப்பு செயலர் சிங்காரம், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் செல்வராஜ், மாநகர், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் மோகன் உள்பட பகுதி செயலர்கள், பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை