வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தானும் உருப்பட மாட்டான்..மற்றவனையும் உருப்பட விட மாட்டான்... திமுகவின் வியாதி இது.... அடித்து அகற்றி விட்டு ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ஓசூர்: ஓசூர் வழியாக பெங்களூருக்கு அமைக்க இருப்பதாக கூறப்-படும் ரயில்பாதை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்-துள்ளனர். தி.மு.க.,- எம்.எல்.ஏ., தலைமையில், நேற்று விவசா-யிகள் ஆலோசனை நடத்தினர்.கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரை சுற்றி, 287 கி.மீ., துாரத்-திற்கு ரயில்வே பாதை அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் தமிழக எல்லையான ஓசூர் அருகே பாகலுார், கொடியாளம், ஈச்-சங்கூர், கொத்தப்பள்ளி, கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, ஜூஜூவாடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி, 40 கி.மீ., துாரத்-திற்கு ரயில்வே பாதை செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது. இத்திட்டம், 23,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்-பட இருப்பதாகவும், தமிழக எல்லையில் குறிப்பிட்டுள்ள கிரா-மங்களில் உள்ள விவசாய நிலங்களில், 300 மீட்டர் அளவிற்கு நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக ஒரு தனியார் சர்வே நிறுவனம், கூகுள் எர்த் வரைபடத்தின் அடிப்படையில், நிள அளவீட்டை டிரோன் மூல-மாக பதிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் சர்வே நிறுவன ஊழியர், 'தென்-மேற்கு ரயில்வேயிடம் அனுமதி பெற்று தான் பணிகள் நடக்கி-றது. சரக்கு ரயில் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இப்பணி மேற்கொள்ளப்ப-டுகிறது' என கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது. சர்வே நிறுவனம் நடத்திய நில அள-வீட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக எல்லையில் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷிடம் தெரி-வித்தனர். அவர் நேற்று காலை சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாகலுார் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இதுபோன்ற திட்டம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. விவசா-யிகள் அச்சப்பட தேவையில்லை என, மாவட்ட கலெக்டர் கூறி-யுள்ளார். டிரோன் மூலமாக சர்வே செய்தது எதற்கு என்ற கேள்வி முதலில் எழுகிறது. மத்திய அரசு ஏதோ ஒரு திட்டத்தை செயல்ப-டுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, வரும், 6 ல் நடக்கும் சட்-டசபையில் பேச உள்ளேன். இதுபோன்ற திட்டங்கள் வந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். எந்த திட்டமாக இருந்தாலும், தமிழக அரசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தானும் உருப்பட மாட்டான்..மற்றவனையும் உருப்பட விட மாட்டான்... திமுகவின் வியாதி இது.... அடித்து அகற்றி விட்டு ரயில் பாதை அமைக்க வேண்டும்.