தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்ஓசூர் :கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன., 5) காலை, 10:00 மணிக்கு, ஓசூர் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து பேசுகிறார். எனவே ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பாக முகவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர , ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.